Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

நம்ம டோனியின் ருத்ரதாண்டவம்.. இலங்கை அணியை துவம்சம் செய்த இந்தியா!

Posted by:
Updated: Monday, October 7, 2013, 10:02 [IST]
 

போர்ட் ஆப் ஸ்பெயின்: மேற்கிந்திய தீவுகளில் நடந்த முத்தரப்பு ஒரு நாள் போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கையை வீழ்த்தி சாம்பியன் ஆனது இந்தியா.

இந்தியா, இலங்கை, மேற்கிந்திய தீவுகள் ஆகிய அணிகள் பங்கேற்ற முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டி மேற்கிந்திய தீவுகளில் நடந்தன. இதன் லீக் ஆட்டங்கள் முடிவில் இந்தியா, இலங்கை அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன. போட்டியை நடத்திய மேற்கிந்திய தீவுகள் அணி இப்போட்டியில் இருந்து வெளியேறியது.

நம்ம டோனியின் ருத்ரதாண்டவம்.. இலங்கை அணியை துவம்சம் செய்த இந்தியா!

இறுதிப்போட்டி நேற்று போர்ட் ஆப் ஸ்பெயினில் நடைபெற்றது. டாசில் வெற்றி பெற்ற இந்தியா, இலங்கை அணியை முதலில் பேட் செய்ய அழைத்தது. 48.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 201 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் புவனேஷ் குமார் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஜடேஜா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

நம்ம டோனியின் ருத்ரதாண்டவம்.. இலங்கை அணியை துவம்சம் செய்த இந்தியா!

202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக சர்மாவும், தவானும் களமிறங்கினர். சர்மா 58 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஹெராத் பந்துவீச்சில் வீழ்ந்தார். தவான் 16 ரன்களுக்கும், விராட் கோலி 2 ரன்களுக்கும் ஆட்டத்தை விட்டு வெளியேறினர்.

டோனி தந்த வெற்றி

கார்த்திக், ரெய்னா இருவரும் முறையே 23, 32 என்ற சொற்ப ரன்களில் அவுட்டாகினர். இதனை தொடர்ந்து விளையாடிய மற்றவர்கள் மிகச்சொற்ப ரன்களில் அவுட்டாகி வெளியேறினர். டோனி மட்டும் நிதானமாக விளையாடினார். 15 ரன்கள் தேவைப்பட்ட கடைசி ஓவரில் சிக்சரும், பவுண்டரியும் விளாசி இந்தியாவுக்கு கோப்பையை பெற்றுத் தந்தார்.

நம்ம டோனியின் ருத்ரதாண்டவம்.. இலங்கை அணியை துவம்சம் செய்த இந்தியா!

இறுதியாக 203 ரன்கள் எடுத்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டத்தை வென்றது. சிறப்பாக விளையாடி 45 ரன்கள் எடுத்த டோனி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

சமீபத்தில் நடந்த சாம்பியன்ஸ் லீக் போட்டியிலும் இந்தியாவே கோப்பையை வென்றது நினைவிருக்கலாம்.

Story first published:  Friday, July 12, 2013, 8:27 [IST]
English summary
Mahendra Singh Dhoni once again lived upto the 'Captain Cool' tag as he held his nerve to almost singlehandedly guide India to yet another title triumph with a narrow one-wicket win over Sri Lanka in a thrilling final of the the Tri-nation ODI series.
கருத்தை எழுதுங்கள்