Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

பாகிஸ்தான் அம்பயர் அலீம் தார் மீது ஷான் வார்னே பாய்ச்சல்!

Posted by:
Published: Saturday, July 13, 2013, 14:47 [IST]
 

பாகிஸ்தான் அம்பயர் அலீம் தார் மீது ஷான் வார்னே பாய்ச்சல்!
 

நாட்டிங்ஹாம்: கிரிக்கெட் போட்டிகளில் பாகிஸ்தான் அம்பயர் அலீம் தார் தொடர்ந்தும் தவறான முடிவுகளையே அளிப்பதாக ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் ஷான் வார்னே கடுமையாக விமர்சித்துள்ளார்.

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரின் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிரென்ட்பிரிட்ஜ் நகரில் நடந்து வருகிறது. நேற்றைய 3வது நாள் ஆட்டத்தில் இங்கிலாந்தின் ஸ்டூவர்ட் பிராட் 37 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆஸ்திரேலியாவின் ஆஸ்டன் வீசிய பந்தில் மைக்கேல் கிளார்க்கிடம் கேட்ச் கொடுத்தார். இதனால் ஆஸ்திரேலிய வீரர்கள் அவுட் கோரினர். ஆனால் அம்பயர் தார் அவுட் கொடுக்கவில்லை. இதனால் ஆட்ட நேர முடிவில் 47 ரன்களை எடுத்து நாட் அவுட் ஆகாமல் இருந்தார் பிராட்.

இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் அடுத்தடுத்து பதிவுகளை வெளியிட்டிருக்கும் ஷான் வார்னே, மனிதர்கள் தவறு செய்வது வழக்கம்தான். ஆனால் எப்போதுமே தவறான முடிவுகளை அம்பயர் தார் கொடுத்து வருகிறார். அவர் ஒன்றும் அப்படி ஒன்றும் மிகப் பெரிய அம்பயர் அல்ல என்று போட்டுத் தாக்கியுள்ளார்.

English summary
Former Australia legspinner Shane Warne has hit out at Pakistani umpire Aleem Dar for failing to give Stuart Broad out when the batsman had edged the ball to slips during the third day of the first Ashes Test between England and Australia on Friday (July 12).
கருத்தை எழுதுங்கள்