Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

டிவிட்டரில் இருப்பது வேற கில்லி, நான் இல்லை... கில்கிறைஸ்ட் மறுப்பு!

Posted by:
Published: Monday, July 15, 2013, 16:58 [IST]
 

டிவிட்டரில் இருப்பது வேற கில்லி, நான் இல்லை... கில்கிறைஸ்ட் மறுப்பு!
 

நாட்டிங்காம்: டிவிட்டரில் எனது பெயரில் எந்த கணக்கும் இல்லை. என் பெயரில் இருப்பது வேறு யாரோ என்று முன்னாள் ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் ஆடம் கில்கிறைஸ்ட் கூறியுள்ளார்.

ஆசஷ் டெஸ்ட் தொடர் இங்கிலாந்தில் தொடங்கியுள்ளது. அதில் முதல் டெஸ்ட் போட்டியில்இங்கிலாந்து வென்று விட்டது. இந்தப் போட்டியில் ஸ்டூவர்ட் பிராட் குறித்து கில்கிறைஸ்ட் பெயரில் டிவிட்டரில் ஒரு கருத்து வெளியாகியிருந்தது.

ஆனால் அதை தான் எழுதவில்லை. அது தனது கணக்கு இல்லை என்று கில்கிறைஸ்ட் மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், அது போலியான டிவிட்டர் கணக்கு. அது நான் இல்லை. நான் எழுதவில்லை. போலியான டிவிட்டர் கணக்கு மூலம் எனது பெயருக்கு அவதூறு ஏற்படுத்தப் பார்க்கிறார்கள். அதை யாரும் நம்ப வேண்டாம் என்று கூறியுள்ளார் கில்கிறைஸ்ட்.

மேலும் அவர் கூறுகையில் இப்படிப்பட்ட போலியான டிவிட்டர் கணக்குகள் மூலம் எனக்கு தர்மசங்கடத்தைக் கொடுப்போர் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.

English summary
Former Australia wicketkeeper Adam Gilchrist has said that comments attributed to him regarding Stuart Broad's controversial decision not to walk during the first Ashes Test were the work of a fake Twitter account. "It has come to my attention that a fake Twitter account in my name has been making comments regarding the Stuart Broad catch in the first Test," said the Australian cricketing great in a statement issued to news organisations.
கருத்தை எழுதுங்கள்