Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

சச்சின், ராபின்சிங்குக்கு நன்றி.. நெகிழும் அம்பாத்தி ராயுடு

Posted by:
Published: Thursday, July 25, 2013, 15:25 [IST]
 

சச்சின், ராபின்சிங்குக்கு நன்றி.. நெகிழும் அம்பாத்தி ராயுடு
 

ஹராரே: இந்திய கிரிக்கெட் அணியில் இணைந்து விளையாடுவதற்காக காத்திருந்த காலங்களில் தமக்கு உதவியாக இருந்த சச்சின் டெண்டுல்கர் மற்றும் ராபின்சிங் ஆகியோருக்கு நன்றி தெரிவிப்பதாக அறிமுக வீரர் அம்பாத்தி ராயுடு கூறியுள்ளார்.

ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதலாவது போட்டியில் அறிமுக வீரராக களம் இறங்கிய அம்பாத்தி ராயுடு அற்புதமாக விளையாடி 63 ரன்களை எடுத்தார். அம்பாத்தி ராயுடுவும் கோஹ்லியும் இணைந்து ஜிம்பாப்வே பந்து வீச்சை சமாளித்ததால் இந்திய அணி வெற்றி பெற்றது.

இந்தப் போட்டிக்குப் பின் பேட்டியளித்த அம்பாத்தி ராயுடு, சச்சின் டெண்டுல்கர், ராபின் சிங் இருவரும் எனக்கு நிறைய உதவி செய்துள்ளனர். அவர்களுக்கு நான் நிச்சயம் நன்றி தெரிவிக்க வேண்டும். இந்திய அணியில் நானும் ஒருநாள் இடம் பெறுவேன். அது நடக்கும் என்று காத்திருந்தேன்.. இன்று எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது.. மிகுந்த மகிழ்ச்சியோடு இருக்கிறேன்.. நான் மிகவும் உணர்வுப்பூர்வமான நிலையில் இருக்கிறேன் என்றார்.

அம்பாத்தி ராயுடு, மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பிடித்திருந்தார். டெண்டுல்கருடன் இணைந்து பல உள்ளூர் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். ராபின்சிங், மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளராவார்.

English summary
Ambati Rayudu thanked Sachin Tendulkar and Robin Singh for helping him during his tough days of waiting to wear the India cap. Rayudu was part of Mumbai Indians in the Indian Premier League (IPL) and played several matches with Tendulkar.
கருத்தை எழுதுங்கள்