Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

விராத் கோஹ்லி அபார சதம்.. ஜிம்பாப்வேயை வென்றது இந்தியா

Posted by:
Updated: Monday, July 29, 2013, 16:21 [IST]
 

ஹராரே: விராத் கோஹ்லி போட்ட அபார சதத்தால், ஜிம்பாப்வே அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது.

ஜிம்பாப்வே சென்றுள்ள இந்திய அணிஅங்கு ஒரு நாள் போட்டித் தொடரில் ஆடுகிறது. இதில் முதல் ஆட்டம் ஹராரேவில் நடந்தது. இப்போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

கோஹ்லி போட்ட அபார சத்தால் இந்தியாவுக்கு வெற்றி கிட்டியது. இது கோஹ்லிக்கு 15வது ஒரு நாள் சதமாகும். கோஹ்லி இப்போட்டியில்115 ரன்களைக் குவித்தார்.

விராத் கோஹ்லி அபார சதம்.. ஜிம்பாப்வேயை வென்றது இந்தியா

முன்னதாக ஜிம்பாப்வே அணி 7 விக்கெட் இழப்புக்கு 228 ரன்களை எடுத்திருந்தது. அதை எளிதாக சேஸ் செய்தது இந்தியா.

இந்தியாவின் பேட்டிங்கின்போது ஷிகார் தவன் 17 ரன்களில் ஆட்டமிழந்தார். ரோஹித் சர்மா 20 ரன்களில் வெளியேறினார். மறு முனையில் கோஹ்லியும், அம்பட்டி ராயுடுவும் நிலைத்து ஆடி வெற்றி கண்டனர். ராயுடு ஆட்டமிழக்காமல் 63 ரன்களைக் குவித்தார்.

5 ஓவர்கள் மீதமிருக்கையில் இந்தியா வெற்றி இலக்கைத் தொட்டது.

Story first published:  Thursday, July 25, 2013, 8:26 [IST]
English summary
Virat Kohli had said he would lead India in Zimbabwe by setting examples. His 115 in the opening match at the Harare Sports Club on Wednesday helped India register a comprehensive 6-wicket win after the home team scored 228 for seven wicket in their 50 overs.
கருத்தை எழுதுங்கள்