Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

ஜிம்பாப்வேக்கு எதிராக ஹாட்ரிக் வெற்றி- ஒரு நாள் தொடரைக் கைப்பற்றியது இந்தியா!

Posted by:
Published: Monday, July 29, 2013, 8:12 [IST]
 

ஹராரே: ஜிம்பாப்வேக்கு எதிரான ஒரு நாள் தொடரில் ஹாட்ரிக் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரைக் கைப்பற்றியுள்ளது.

ஜிம்பாப்வே சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 2 ஒருநாள் போட்டிகளில் வென்று முன்னிலையில் இருந்தது. ஹராரேயில் நேற்று 3வது ஒருநாள் போட்டி நடைபெற்றது.

டாஸ் ஜெயித்த இந்திய கேப்டன் கோஹ்லி ஜிம்பாப்வேயை முதலில் பேட் செய்ய அழைத்தார். ஜிம்பாப்வேயின் தொடக்க வீரர் சிபாண்டா ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார். மற்றொரு தொடக்க வீரர் சிகந்தர் ராசா 1 ரன்னில் வெளியேற்றப்பட்டார்.

ஜிம்பாப்வேக்கு எதிராக ஹாட்ரிக் வெற்றி- ஒரு நாள் தொடரைக் கைப்பற்றியது இந்தியா!

2 ரன்னுக்குள் 2 விக்கெட்டுகளை பறிகொடுத்த ஜிம்பாப்வேயை மசகட்சாவும், கேப்டன் பிரன்டன் டெய்லரும் சரிவில் இருந்து மீட்க போராடினார்கள். 3 வது விக்கெட்டுக்கு 65 ரன்கள் எடுத்த இந்த ஜோடியை ஜெய்தேவ் உனட்கட் பிரித்தார். இரண்டு முறை ரன் அவுட் வாய்ப்பில் இருந்து தப்பித்த பிரன்டன் டெய்லர் 23 ரன்களில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

89 ரன்னுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்த ஜிம்பாப்வே அணியால் எழ முடியவில்லை. ஜிம்பாப்வே அணி 46 ஓவர்களில் 183 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

பின்னர் 184 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய வீரர்கள் களமிறங்கினர். தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் ஷர்மா 14 ரன்களையும் ஷிகர் தவான் 35 ரன்களையும் எடுத்திருந்தனர். பின்னர் கோஹ்லி, அம்பத்தி ராயுடு ஆகியோர் நிதானமாக ரன்களைக் குவித்தனர். 131 ரன்களாக உயர்ந்த நிலையில் ராயுடு அவுட் ஆனார். பின்னர் கோஹ்லியுடன் சுரேஷ் ரெய்னா ஜோடி சேர்ந்தார்.

இந்திய அணி 35.3 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 187 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றியை பறித்தது.

இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் தொடரை இந்தியா 3-0 என்ற கணக்கில் ஹாட்ரிக் வெற்றி பெற்றது.

இந்தியா- ஜிம்பாப்வே இடையிலான 4-வது ஒரு நாள் போட்டி புலவாயோவில் வருகிற 1-ந்தேதி நடைபெறுகிறது. இந்த ஆண்டில் ஒரு நாள் போட்டியில் இந்தியா வென்ற 4-வது கோப்பை இது.

இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடர், சாம்பியன்ஸ் கோப்பை, மேற்கிந்திய தீவுகளில் நடந்த முத்தரப்பு தொடர் ஆகியவற்றிலும் இந்தியா வென்றுள்ளது.

English summary
An unbeaten half-century from captain Virat Kohli spurred India to a seven-wicket victory over Zimbabwe at Harare Sports Club on Sunday and earned the world champions an unassailable 3-0 lead in the five-match, one-day series
கருத்தை எழுதுங்கள்