Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

பாகிஸ்தானின் ஷாஹித் அப்ரிதி 400 சிக்சர் அடித்து சாதனை!!

Posted by:
Published: Monday, July 29, 2013, 13:07 [IST]
 

பாகிஸ்தானின் ஷாஹித் அப்ரிதி 400 சிக்சர் அடித்து சாதனை!!
 

கிங்ஸ்டவுன்: பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சர்வதேச அளவில் 400 சிக்சர்களை அடித்த முதலாவது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் பாகிஸ்தான் அணிக்கும் இடையே சனிக்கிழமை டி20 போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் 2 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வென்றது. இதில் அப்ரிதி 2 சிக்சர்களை அடித்திருந்தார். இதன் மூலம் 400 சிக்சர்களை அடித்த முதலாவது கிரிக்கெட் வீரர் என்ற சாதனை படைத்திருக்கிறார் அவர்.

33 வயதாகும் அப்ரிதி, 359 ஒருநாள் போட்டிகளில் 314 சிக்சர்களையும், 27 டெஸ்ட் போட்டிகளில் 52 சிக்சர்களையும் 20 டி20-ல் 61 சிக்சர்களையும் விளாசியிருக்கிறார். 1996ஆம் ஆண்டு கென்யாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 37 பந்துகளில் சதமடித்து சாதனை படைத்தார்.

அப்ரிதிக்கு அடுத்ததாக 353 சிக்சர்களுடன் 2வது இடத்தில் இருக்கிறார் மேற்கிந்திய தீவுகள் அணியின் கிறிஸ் கெய்ல்

English summary
Pakistan's Shahid Afridi has become the first batsman to hit 400 sixes at the international level.
கருத்தை எழுதுங்கள்