Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

2015 உலகக் கோப்பை கிரிக்கெட்... போட்டிகளின் முழுவிவரம்!

Posted by:
Updated: Friday, October 4, 2013, 12:33 [IST]
 

மெல்போர்ன்: 2015 உலகக் கோப்பைக் கிரிக்கெட் தொடரில் நடைபெறவுள்ள போட்டிகள் குறித்த முழு அட்டவணை வெளியாகியுள்ளது.

14 அணிகள் இத்தொடரில் பங்கேற்கின்றன. ஆஸ்திரேலியாவும், நியூசிலாந்தும் இணைந்து போட்டிகளை நடத்துகின்றன.

பிப்ரவரி 14ம் தேதி தொடங்கி மார்ச் 29ம் தேதி வரை போட்டிகள் நடைபெறும்.

இரு பிரிவுகள்

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை, வங்கதேசம், நியூசிலாந்து, குவாலிபயர் 2, குவாலிபயர் 3 ஆகியவை ஏ பிரிவிலும், இந்தியா, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், மேற்கு இந்தியத் தீவுகள், ஜிம்பாப்வே, அயர்லாந்து (குவாலிபயர் 1), குவாலிபயர் 4 ஆகியவை பி பிரிவிலும் இடம் பெற்றுள்ளன.

2015 உலகக் கோப்பை கிரிக்கெட்... போட்டிகளின் முழுவிவரம்!

முதல் போட்டி பிப்ரவரி 14

பிப்ரவரி 14ம் தேதி முதல் போட்டி நடக்கிறது. கிறிஸ்ட்சர்ச்சில் இலங்கையும், நியூசிலாந்தும் முதல் போட்டியில் மோதும்.

பிப்ரவரி 15

பிப்ரவரி 15ம் தேதி தென் ஆப்பிரிக்காவும், ஜிம்பாப்வேயும் ஹாமில்டனில் மோதும்

பிப்ரவரி 16

பிப்ரவரி 16ம் தேதி மேற்கு இந்தியத் தீவுகளும் அயர்லாந்தும் நெல்சனில் மோதும்.

பிப்ரவரி 17

பிப்ரவரி 17ம் தேதி நியூசிலாந்தும், குவாலிபயர் 3 அணியும் டுனிடின் போட்டியில் சந்திக்கும்.

பிப்ரவரி 18

பிப்ரவரி 18ம் தேதி கான்பெராவில் நடைபெறும் போட்டியில், வங்கதேசமும், குவாலிபயர் 2 அணியும் மோதவுள்ளன.

பிப்ரவரி 19

பிப்ரவரி 19ம் தேதி நெல்சனில் நடைபெறும் போட்டியில் ஜிம்பாப்வேயும், குவாலிபயர் 4 அணியும் மோதவுள்ளன.

பிப்ரவரி 20

பிப்ரவரி 20ம் தேதி நடைபெறும் போட்டியில், இங்கிலாந்தும், நியூசிலாந்தும் வெல்லிங்டனில் சந்திக்கவுள்ளன.

பிப்ரவரி 21

பிப்ரவரி 21ம் தேதி நடைபெறும் போட்டியில் பாகிஸ்தானும், மேற்கு இந்தியத் தீவுகள் அணியும் மோதவுள்ளன. கிறிஸ்ட் சர்ச்சில் இப்போட்டி நடைபெறும்.

பிப்ரவரி 22

பிப்ரவரி 22ம் தேதி இலங்கைக்கும், குவாலிபயர் 2 அணிக்கும் இடையே மெல்போர்னில் போட்டி நடைபெறும்.

பிப்ரவரி 23

பிப்ரவரி 23ம் தேதியன்று கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெறும் போட்டியில், இங்கிலாந்தும், குவாலிபயர் 3 அணியும் சந்திக்கவுள்ளன.

பிப்ரவரி 24

பிப்ரவரி 24ம் தேதி கான்பெராவில் நடைபெறும் போட்டியில் மேற்கு இந்தியத் தீவுகளும், ஜிம்பாப்வேயும் மோதவுள்ளன.

பிப்ரவரி 25

பிப்ரவரி 25ம் தேதி நடைபெறும் போட்டியில் அயர்லாந்தும், குவாலிபயர் 4 அணியும் சந்திக்கவுள்ளன. இப்போட்டி பிரிஸ்பேனில் நடைபெறும்.

பிப்ரவரி 26

பிப்ரவரி 26ம் தேதி மெல்போர்னில் நடைபெறும் போட்டியில் குவாலிபயர் 2 மற்றும் குவாலிபயர் 3 அணிகள் மோதவுள்ளன.

பிப்ரவரி 27

பிப்ரவரி 27ம் தேதி நடைபெறும் போட்டியில், தென் ஆப்பிரிக்காவும், மேற்கு இந்தியத் தீவுகளும் சந்திக்கின்றன.

பிப்ரவரி 28

பிப்ரவரி 28ம் தேதி நடைபெறும் போட்டியில், இந்தியாவும், குவாலிபயர் 4 அணியும் சந்திக்கவுள்ளன. அதே தினத்தில் ஆஸ்திரேலியாவும், நியூசிலாந்தும் ஆக்லாந்தில் மோதவுள்ளன.

மார்ச் 1

மார்ச் 1ம் தேதி வெல்லிங்டனில் இங்கிலாந்து, இலங்கையும், பிரிஸ்பேனில் பாகிஸ்தான் ஜிம்பாப்வேயும் மோதவுள்ளன. மார்ச் 2 ஓய்வு தினமாகும்.

மார்ச் 3

மார்ச் 3ம் தேதி கான்பொவில் தென் ஆப்பிரிக்கா அயர்லாந்து அணிகள் மோதவுள்ளன.

மார்ச் 4

மார்ச் 4ம் தேதி நேப்பியரில் நடைபெறும் போட்டியில் பாகிஸ்தானும், குவாலிபயர் 4 அணியும் சந்திக்கும். பெர்த்தில் நடைபெறும் போட்டியில் ஆஸ்திரேலியாவும், குவாலிபயர் 2 அணியும் மோதும்.

மார்ச் 5

மார்ச் 5ம் தேதி நடைபெறும் போட்டியில் வங்கதேசமும், குவாலிபயர் 3 அணியும் மோதும்.

மார்ச் 6

மார்ச் 6ம் தேதி பெர்த்தில் நடைபெறும் போட்டியில், இந்தியாவும், மேற்கு இந்திய்த தீவுகள் அணியும் மோதும்.

மார்ச் 7

மார்ச் 7ம் தேதி ஆக்லாந்தில் தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தானும், ஹோபர்ட்டில் ஜிம்பாப்வே அயர்லாந்து அணிகளும் மோதவுள்ளன.

மார்ச் 8

மார்ச் 8ம் தேதி போட்டியில் நேப்பியரில் நியூசிலாந்து, குவாலிபயர் 2 அணிகளும், சிட்னியில் ஆஸ்திரேலியா, இலங்கை அணிகளும் மோதவுள்ளன.

மார்ச் 9

மார்ச் 9ம் தேதி போட்டியில் இங்கிலாந்தும், வங்கதேசமும் அடிலெய்டில் சந்திக்கவுள்ளன.

மார்ச் 10

மார்ச் 10ம் தேதி ஹாமில்டன் போட்டியில் இந்தியாவும், அயர்லாந்தும் மோதும்.

மார்ச் 11

மார்ச் 11ம் தேதி நடைபெறும் போட்டியில் இலங்கையும், குவாலிபயர் 3 அணிகள் சந்திக்கவுள்ளன.

மார்ச் 12

மார்ச் 12ம் தேதி போட்டியில் தென் ஆப்பிரிக்காவும், குவாலிபயர் 4 அணிகள் மோதும்.

மார்ச் 13

மார்ச் 13ம் தேதி நடைபெறும் போட்டியில் வங்கதேசம், நியூசிலாந்து ஹாமில்டனிலும், இங்கிலாந்து, குவாலிபயர் 2 அணிகள் சிட்னியிலும் மோதும்.

மார்ச் 14

மார்ச் 14ம் தேதி போட்டியில் இந்தியா ஜிம்பாப்வே ஆகியவை ஆக்லாந்திலும், ஆஸ்திரேலியா, குவாலிபயர் 3 அணிகள் ஹோபர்ட்டிலும் மோதும்.

மார்ச் 15

மார்ச் 15ம் தேதி போட்டியில் மேற்கு இந்தியத் தீவுகள், குவாலிபயர் 4 அணிகள் நேப்பியரிலும், பாகிஸ்தான், அயர்லாந்து அணிகள் அடிலெய்டிலும் சந்திக்கவுள்ளன.
மார்ச் 16-17 ஓய்வு தினங்களாகும்.

மார்ச் 18

மார்ச் 18ம் தேதி முதல் காலிறுதிப் போட்டி, சிட்னி.

மார்ச் 19

மார்ச் 19ம் தேதி முதல் காலிறுதிக்கான ரிசர்வ் நாள். 2வது காலிறுதிப் போட்டி, மெல்போர்ன்.

மார்ச் 20

2வது காலிறுதிக்கான ரிசர்வ் நாள். 3வது காலிறுதிப் போட்டி, அடிலெய்டு.

மார்ச் 21

3வது காலிறுதிக்கான ரிசர்வ் நாள். 4வது காலிறுதிப் போட்டி, வெல்லிங்டன்.

மார்ச் 22

4வது காலிறுதிப் போட்டிக்கான ரிசர்வ் நாள். மார்ச் 23 ஓய்வு தினம்.

மார்ச் 24

முதல் அரை இறுதிப் போட்டி, ஆக்லாந்து. மார்ச் 25ம் தேதி முதல் அரை இறுதிக்கான ரிசர்வ் நாள்.

மார்ச் 26

மார்ச் 26ம் தேதி 2வது அரை இறுதி, சிட்னி. மார்ச் 27 2வது அரை இறுதிக்கான ரிசர்வ் நாள்.

மார்ச் 29

மார்ச் 29ம் தேதி இறுதிப் போட்டி, மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம். மார்ச் 30ம் தேதி இறுதிப் போட்டிக்கான ரிசர்வ் தினம்.

Story first published:  Tuesday, July 30, 2013, 15:47 [IST]
English summary
Below is the full list of fixtures for the 2015 ICC Cricket World Cup
கருத்தை எழுதுங்கள்