Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

ஒரு கேப்டனைப் போல கோஹ்லி நடந்துக்கலையே.....: அசாருதீன் கடுப்பு

Posted by:
Published: Tuesday, July 30, 2013, 8:32 [IST]
 

ஒரு கேப்டனைப் போல கோஹ்லி நடந்துக்கலையே.....: அசாருதீன் கடுப்பு
 

டெல்லி: ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டியில் ஒரு கேப்டனைப் போல விராத் கோஹ்லி நடந்து கொள்ளவில்லையே என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

ஜிம்பாப்வேக்கு எதிரான 2வது ஒருநாள்போட்டியில் மூன்றாவது அம்பயர் முடிவை தெரிவித்த பிறகும் கூட உரத்த குரலில் வாதிட்டுக் கொண்டிருந்தார் கோஹ்லி. இது தொடர்பாக கருத்து தெரிவித்திருக்கும் அசாருதீன், கோஹ்லி ஒரு கேப்டனைப் போல நடந்து கொள்ளவில்லை. அவரது நடவடிக்கை ஒரு கேப்டனுக்குரியதாக இருக்க வேண்டும். இந்திய அணியின் எதிர்கால கேப்டனாக வரக்கூடியவர் இப்படி செயல்பட க் கூடாது.

தற்போது இளைஞர்களைக் கொண்டிருக்கும் இந்திய அணி நன்றாக வ் இளையாடி வருகிறது. மூத்த வீரர்களுக்கு வயதாகிவிடவில்லை.

ஐபிஎல் பிக்ஸிங் தொடர்பான செய்திகளை நான் பாலோ அப் செய்வதில்லை. அதுபற்றி கருத்து கூறுவது இயலாத ஒன்று என்றார்.

English summary
Former Indian cricket captain Mohammed Azharuddin was critical of young skipper Virat Kohli losing his temper while controversially given out during the second ODI against Zimbabwe.
கருத்தை எழுதுங்கள்