Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

இந்தியா அபார பந்து வீச்சு- 144 ரன்களில் சுருண்டது ஜிம்பாப்வே

Posted by:
Updated: Thursday, August 1, 2013, 17:13 [IST]
 

இந்தியா அபார பந்து வீச்சு- 144 ரன்களில் சுருண்டது ஜிம்பாப்வே
 

புலவேயோ: ஜிம்பாப்வேவுக்கு எதிரான 4வது ஒரு நாள் போட்டியில் இந்தியா அபாரமாக பந்து வீசி, அந்த அணியை 144 ரன்களுக்குள் சுருட்டியது.

ஏற்கனவே 3 போட்டிகளில் வென்று தொடரைக் கைப்பற்றி விட்ட இந்தியா, இன்றைய போட்டியிலும் வெல்லும் வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.

இரு அணிகளுக்கும் இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இன்று 4வது போட்டி, புலவேயோ மைதானத்தில் நடந்தது. இதில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தது.

இந்தியாவின் பந்து வீச்சு இன்று மிகச் சிறப்பாகவும் நேர்த்தியாகவும் இருந்தது. இந்தியாவின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தவித்துப் போய் விட்டனர் ஜிம்பாப்வே வீரர்கள்.

குறிப்பாக சுழற்பந்து வீச்சாளர் அமீத் மிஸ்ரா மிகச் சிறப்பாக பந்து வீசி 25 ரன்கள் மட்டும் கொடுத்து 3 விக்கெட்களைச் சாய்த்தார்.

ஒரு கட்டத்தில் 5 விக்கெட்களை இழந்து 47 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது ஜிம்பாப்வே. இருப்பினும் எல்டன் சிகும்பராவும், மால்கம் வாலரும் சேர்ந்து அணியை ஸ்திரப்படுத்த முயன்றனர். இருவரும் நிதானமாக ஆடியதால் அணியின் ஸ்கோர் 100ஐத் தாண்டியது. இருவரும் சேர்ந்து 80 ரன்களைச் சேர்த்தனர். வாலர் ஆட்டமிழந்ததும் ஜிம்பாப்வே வேகமாக ஆட்டமிழந்தது.

சிகும்பரா ஆட்டமிழக்காமல் 50 ரன்களை எடுத்தார். வாலர் 35 ரன்களைச் சேர்த்தார். இந்திய அணியில் அறிமுகமான மொஹித் சர்மா தன் பங்குக்கு 2 விக்கெட்களைச் சாய்த்தார்.

சமி அகமது, உனத்கட் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். ரவீந்திர ஜடேஜாவுக்கு 2 விக்கெட்கள் கிடைத்தன.

Story first published:  Thursday, August 1, 2013, 16:44 [IST]
English summary
Disciplined show by bowlers helped India bundle out Zimbabwe for just 144 in the fourth ODI at Queens Sports Club, Bulawayo on Thursday. Leg spinner Amit Mishra got rid of the tailenders and finished with 3/25.
கருத்தை எழுதுங்கள்