Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

4வது போட்டியிலும் கலக்கிய இந்தியா- ஜிம்பாப்வேவை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது!

Posted by:
Updated: Friday, August 2, 2013, 14:27 [IST]
 

புலவாயோ: புலவாயோவில் நடைபெற்ற 4வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியிலும் இந்திய அணி ஜிம்பாப்வே அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது.

இந்தியா, ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 4வது ஒரு நாள் போட்டி புலவாயோ நகரில் நேற்று, பகல் இரவு ஆட்டமாக நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் கோஹ்லி பீல்டிங்கை தேர்வு செய்தார்.

ஜிம்பாவே அணியின் சிபாண்டாவும், சிகந்தர் ராசாவும் ஜிம்பாப்வே அணியின் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஆனால் இந்திய அணியின் பந்துவீச்சை ஜிம்பாப்வே வீரர்களால் எதிர்கொள்ள முடியாமல் போனது.

4வது போட்டியிலும் கலக்கிய இந்தியா- ஜிம்பாப்வேவை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது!

47 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை பறிகொடுத்தது அந்த அணி. பின்னர் 6வது விக்கெட்டுக்கு இணைந்த சிகும்புரா, மால்கம் ஆகியோர்தான் போராடி ஜிம்பாப்வேயை மீட்டனர். ஸ்கோர் 127 ரன்களாக இருந்த போது எட்டிய போது, மால்கம் வெளியேறினார்.

இறுதியாக 42.4 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த ஜிம்பாப்வே அணி 144 ரன்கள்தான் எடுத்திருந்தது. சிகும்புரா 50 ரன்களுடன் அவுட் ஆகாமல் இருந்தார்.

எளிதான வெற்றி இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. புஜாராவும், ரோகித் ஷர்மாவும் தொடக்க வீரர்களாக களம் புகுந்தனர். புஜாரா 13 ரன்களில் அவுட் ஆனார். ரோகித் ஷர்மா அபாரமாக விளையாடி அரசை சதம் கடந்தார். அவருடன் ரெய்னாவும் இணைந்து அரைசதம் கடந்தார்.

30.5 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 145 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேயை வென்றது இந்தியா. ரோகித் ஷர்மா 64 ரன்களுடனும், ரெய்னா 65 ரன்களுடனும் களத்தில் அவுட் ஆகாமல் இருந்தனர்.

10 ஓவர்களில் மூன்று மெய்டனுடன் 26 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய இந்திய அறிமுக பந்துவீச்சாளர் மொகித் ஷர்மா ஆட்டநாயகன் விருதை பெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் தொடரில் இந்திய அணி 4-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

Story first published:  Friday, August 2, 2013, 14:18 [IST]
English summary
India made light work of their fourth one-day international against Zimbabwe on Thursday, as they beat the hosts by nine wickets to take a 4-0 lead in the series
கருத்தை எழுதுங்கள்