Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

அக்.18ல் மும்பை கிரிக்கெட் சங்க தேர்தல்! சரத் பவார் போட்டி?

Posted by:
Published: Tuesday, August 13, 2013, 15:42 [IST]
 

அக்.18ல் மும்பை கிரிக்கெட் சங்க தேர்தல்! சரத் பவார் போட்டி?
 

மும்பை: மும்பை கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் தேர்தல் அக்டோபர் 18-ந் தேதி நடைபெற உள்ளது. இதில் மத்திய அமைச்சர் சரத்பவாரும் போட்டியிடக் கூடும் எனத் தெரிகிறது.

இது தொடர்பாக மும்பை கிரிக்கெட் சங்கத் தலைவர் ரவி சாவந்த் கூறுகையில், அக்டோபர் 18-ந் தேதி தேர்தல் நடைபெறும். ஒவ்வொரு கிளப்பும் வாக்காளர் பட்டியலை இறுதி செய்ய செப்டம்பர் 17-ந் தேதி கடைசி நாள். வேட்புமனு தாக்கல் செய்ய அக்டோபர் 11-ந் தேதி கடைசி நாள். அக்டோபர் 12-ல் வேட்புமனுக்கள் பரிசீலிக்கப்படும். அக்டோபர் 15-ந் தேதி வேட்புமனுக்கள் திரும்பப் பெற கடைசி நாள் என்றார்.

மேலும் மும்பை கிரிக்கெட் சங்கத் தலைவர் பதவிக்கு மீண்டும் சரத்பவார் போட்டியிடக் கூடும் என எதிர்பார்க்கிறோம் என்றார் அவர்.

கடந்த முறை முகவரி பிரச்சனையால் சரத்பவார் போட்டியிடவில்லை. இதைத் தொடர்ந்து விலாஸ்ராவ் தேஸ்முக் பொறுப்பேற்றார். அவர் மறைவுக்குப் பிறகு சாவந்த் பொறுப்பேற்றார்.

English summary
Mumbai Cricket Association today announced October 18 as the date of its biennial elections at its managing committee meeting here.
கருத்தை எழுதுங்கள்