Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

கிரிக்கெட்: எஸ்ஸெக்ஸ் அணிக்காக கெளதம் காம்பீர் ஒப்பந்தம்

Posted by:
Published: Thursday, August 15, 2013, 16:52 [IST]
 

பெங்களூர்: இங்கிலாந்து கவுண்டி அணியான எஸ்ஸெக்ஸ் கிளப் அணிக்காக இந்திய வீரர் கெளதம் காம்பீர் ஒப்பந்தமாகியுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்தின் ஹமிஸ் ரூதெர்ஃபோர்டுக்குப் பதிலாக காம்பீர் இடம்பெற்றுள்ளார். இது தொடர்பாக எஸ்ஸெக்ஸ் அறிவிப்பை சுட்டிக் காட்டி ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் காம்பீர், எஸ்ஸெக்ஸ் கவுண்டி கிளப் அணிக்காக விளையாடுவது மகிழ்ச்சி அளிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

கிரிக்கெட்: எஸ்ஸெக்ஸ் அணிக்காக  கெளதம் காம்பீர் ஒப்பந்தம்

எஸ்ஸெக்ஸ் கவுண்டி தலைமை கோச் பெளல் கிரெசன் கூறுகையில், காம்பீர் தமது முழு திறமையையும் அனுபவத்தையும் அணிக்காக பயன்படுத்துவார் என்பதில் சந்தேகமே இல்லை என்று கூறியுள்ளார்.

English summary
Opener Gautam Gambhir, who is aiming to make a comeback to the Indian team, will play for England's Essex County Cricket Club this season, the team announced on Thursday.
கருத்தை எழுதுங்கள்