Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

பிசிசிஐயின் நிகர வருவாய் ரூ. 350 கோடியாம்

Posted by:
Published: Friday, August 23, 2013, 14:16 [IST]
 

பிசிசிஐயின் நிகர வருவாய் ரூ. 350 கோடியாம்
 

மும்பை: இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நிகர வருமானம் ரூ. 350 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகிலேயே மிகப் பெரிய பணக்கார கிரிக்கெட் அமைப்பு என்ற பெருமையுடன் திகழ்வது இந்திய கிரிக்கெட் வாரியம். இந்த அமைப்பு 2012-13ம் நிதியாண்டில் ரூ. 350 கோடி நிகர வருவாயை ஈட்டியுள்ளது. மொத்த வருவாய் ரூ. 950 கோடியாகும்.

கிரிக்கெட் வாரியமானது, 2011-12ம் ஆண்டு ரூ. 382.36 உபரி வருவாயையும் ஈட்டியிருந்தது. வாரியத்தின் நிதிக் கமிட்டிக் கூட்டம் டெல்லியில் நடந்தது. அதன் பின்னர் இத்தகவலை வாரிய பொருளாளர் ரவி சாவந்த் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

English summary
The Indian cricket Board posted net income of Rs 350 crore, while its gross revenue stood at Rs 950 crore during the fiscal 2012-13. The BCCI, considered the world's richest cricket body, has earned a surplus of Rs 382.36 crore in 2011-12.
கருத்தை எழுதுங்கள்