Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

தப்புத்தான், 'பிட்ச்'சில் உச்சா போனது தப்புத்தான்.. உக்கி போடும் இங்கிலாந்து!

Posted by:
Updated: Wednesday, August 28, 2013, 17:20 [IST]
 

லண்டன்: ஆஷஸ் தொடரை வென்றதைத் தொடர்ந்து தாங்கள் லண்டன் ஓவல் மைதான பிட்ச்சில் அமர்ந்து கொண்டாடியதும், சிறுநீர் கழித்ததும் தவறான செயல் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் மன்னிப்பு கேட்டுள்ளனர்.

இதுதொடர்பாக கிரிக்கெட் வீரர்கள் இணைந்து ஒரு அறிக்கை மூலம் மன்னிப்பு கோரியுள்ளனர்.

இந்த மன்னிப்பு அறிக்கை இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

ஓவல் மைதானத்தில் சிறுநீர் அபிஷேகம்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் தொடரை 3-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி வென்றதைத் தொடர்ந்து லண்டன் ஓவல் மைதானத்தில் அமர்ந்து கொண்டாடினர் இங்கிலாந்து வீரர்கள். அப்போதுதான் பிட்ச்சில் சில வீரர்கள் சிறுநீர் கழித்து அசிங்கமாக நடந்து கொண்டனர்.

மன்னிச்சுக்குங்க சார்

இந்த நிலையில் தங்களது செயலுக்காக இங்கிலாந்து வீரர்கள் மன்னிப்பு கோரியுள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் விடுத்துள்ள அறிக்கை...

உள்நோக்கம் இல்லை

எங்களது கொண்டாட்டத்தில் கிரிக்கெட் போட்டிக்கும், மைதானத்திற்கும், கிரிக்கெட் ரசிகர்களுக்கும் அவமரியாதை ஏற்படுத்தும் எந்தவிதமான உள்நோக்கமும் இல்லை.

கிரிக்கெட்டைநேசிக்கிறோம்

நாங்கள் கிரிக்கெட்டை நேசிக்கிறோம். கிரிக்கெட்டுக்கு மரியாதை செலுத்துகிறோம். எதிராளிகளையும் நேசிக்கிறோம். நாங்கள் விளையாடும் மைதானத்தையும் நேசிக்கிறோம். இருப்பினும் எங்களில் சிலரின் நடத்தை பொருத்தமற்றது என்பதை ஒத்துக் கொள்கிறோம்.

மன்னித்து விடுங்கள்

அவர்களின் நடத்தை யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால் நாங்கள் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம். இது எதேச்சையாக நடந்ததே தவிர திட்டமிட்டு எதுவும் நடக்கவில்லை என்று அவர்கள் கூறியுள்ளனர்.

ஒருவாட்டி, ரெண்டு வாட்டி உச்சா போனார்கள்

இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் கிரீம் ஸ்வான் கூறுகையில், எங்களது வீரர்கள் மைதானத்தின் நடுவே பிட்ச் பகுதியில் அமர்ந்து கொண்டாடியது உண்மைதான். பீர் சாப்பிட்டனர். ஜாலியாக பேசினர். சிலருக்கு ஒருமுறை அல்லது இரண்டு முறை சிறுநீர் வந்ததும் உண்மைதான். ஆனால் தவறாக நடக்கவில்லை.

இருட்டுல கண்ணு தெரியலை..

அப்போது நள்ளிரவு நேரம். மைதானம் இருட்டாக இருந்ததால் சரியாக தெரியாமல் போயிருக்கலாம் என்றார்.

ஓ.. இருட்டா இருந்தா ஒண்ணுமே தெரியாதா... அடடே!

 

Story first published:  Wednesday, August 28, 2013, 17:14 [IST]
English summary
England's cricketers have issued an apology for any offence caused during their celebrations of their Ashes series win over Australia at the Oval on Sunday. The statement, released on the England and Wales Cricket Board's website, followed allegations that England players urinated on the pitch hours after the series had ended on Sunday night in a 3-0 win for the home side.
கருத்தை எழுதுங்கள்