Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

டி20 தரவரிசையில் இந்தியாவுக்கு 3வது ரேங்க்

Posted by:
Published: Sunday, September 1, 2013, 16:20 [IST]
 

துபாய்: டுவென்டி 20 போட்டிகளுக்கான தரவரிசையில் இந்தியா 3வது இடத்தில் தொடர்ந்து நீடிக்கிறது.

வீரர்கள் வரிசையில் விராத் கோஹ்லி 6வது இடத்தில் நீடிக்கிறார்.

ஆல்ரவுண்டர்கள் வரிசையில் யுவராஜ் சிங்குக்கு அதே நான்காவது இடம் கிடைத்துள்ளது.

121 புள்ளிகளுடன் 3வது இடம்

இந்திய அணி தற்போது 121 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது.

இலங்கை முதல் இடம்

இலங்கைக்கு இந்த வரிசையில் முதலிடம் கிடைத்துள்ளது. பாகிஸ்தான் அணி 2வது இடத்தில் இருக்கிறது.

கோஹ்லிக்கு 6வது இடம்

வீரர்கள் வரிசையில் விராத் கோஹ்லி 6வது இடத்தில் நீடிக்கிறார். சுரேஷ் ரெய்னா தொடர்ந்து 8வது இடத்தில் இருக்கிறார்.

யுவராஜ் 16 -கம்பீர் 19

யுவராஜ் சிங் 16வது இடத்திலும், கெளதம் கம்பீர் 19வது இடத்திலும் உள்ளனர்.

பந்து வீச்சில் அஸ்வின் ஸ்வீட் 16

பந்து வீச்சாளர்களில் இந்திய வீரர் அஸ்வின் 16வது இடத்தில் இருக்கிறார். அவருக்கு முன்பு ஒரு இந்திய வீரர் கூட இல்லை என்பது துரதிர்ஷ்டவசமானது. அதேபோல டாப் 20க்குள் அஸ்வின் மட்டுமே இருக்கிறார்.

ஆல் ரவுண்டர்களில் யுவராஜுக்கு 4வது இடம்

ஆல் ரவுண்டர்கள் வரிசையில் யுவராஜ் சிங்குக்கு 4வது இடம் கிடைத்துள்ளது.

English summary
India have managed to retain their third spot among T20 teams while Virat Kohli has held on to his sixth spot in the ICC rankings for Twenty20 batsmen issued on Sunday. India are placed at third with 121 rating points in the ICC T20 Championship table, which is headed by Sri Lanka and followed by Pakistan.
கருத்தை எழுதுங்கள்