Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

ஷேவாக், யுவராஜ், ஜாகிர், கம்பீருக்கு 'லைஃப்லைன்'.. இந்தியா ஏ அணியில் சேர்ப்பு

Posted by:
Published: Tuesday, September 10, 2013, 18:50 [IST]
 

மும்பை: எப்படி இருந்த.. என்ற வசனத்துக்கு மிகச் சரியான உதாரணம் வீரேந்திர ஷேவாக்கும், கெளதம் கம்பீரும், யுவராஜ் சிங்கும், ஜாகிர் கானும்.. இந்திய அணியின் அசைக்க முடியாத ஜாம்பவான்களாக திகழ்ந்த இவர்கள் இன்று இந்தியா ஏ அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த நால்வரும் பார்ம் போய், பிட்னஸ் போய் இந்திய அணியில் இடம்ப ெற முடியாமல் தவித்துக் கொண்டிருப்பவர்கள் ஆவர்.

இந்த நிலையில் மேற்கு இந்தியத் தீவுகள் ஏ அணிக்கு எதிரான தொடருக்கான இந்திய ஏ அணியில் நால்வரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்திய ஏ அணியில் இவர்கள் சேர்க்கப்பட்டாலும் கூட இது இவர்கள் மீண்டும் இழந்த பார்முக்குத் திரும்பக் கிடைத்த ஒரு புத்துயிர் வாய்ப்பாக கருதப்படுவதால் நால்வரும் இதை எப்படிப் பயன்படுத்தப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

யுவராஜ் சிங்தான் கேப்டன்

இந்தியா ஏ அணியின் கேப்டனாக யுவராஜ் சிங் அறிவிக்கப்பட்டுள்ளார்.

3 ஒரு நாள் போட்டிகள் - ஒரு 20-20

இந்தியா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகள் ஏ அணிகள் 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் ஒரு டுவென்டி 20 போட்டியில் மோதவுள்ளன.

2 நான்கு நாள் போட்டிகள்

இதுதவிர 2 நான்கு நாள் போட்டிகளும் நடைபெறவுள்ளன. இதில் கம்பீர், ஷேவாக், ஜாகிர்கான் ஆகியோர் இடம் பெறுவார்கள்.

யூசுப் பதான், இர்பான் பதான்

யுவராஜ் சிங் தலைமையிலான இந்திய அணியில் யூசுப் பதான், இர்பான் பதான் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். பிரவீன் குமாருக்கும் இடம் கிடைத்துள்ளது.

நான்கு நாள் போட்டிக்கு புஜாரா கேப்டன்

நான்கு நாள் போட்டிகளுக்கு கேப்டனாக சட்டேஸ்வர் புஜாரா செயல்படுவார். ரசிகர்களால் நீண்ட காலத்திற்கு முன்பே மறக்கடிக்கப்பட்ட முகம்மது கைபுக்கும் அணியில் இடம் கொடுத்துள்ளனர்.

மொத்தத்தில்....

மொத்தத்தில் புத்துயிருக்காக துடித்துக் கொண்டுள்ள பல முன்னணி வீரர்களுக்கு இந்தப் போட்டிகளில் முன்னுரிமை கொடுத்து உள்ளே திணித்துள்ளனர்.

இவைதான் அணிகள்...

ஒரு நாள் - டுவென்டி 20 போட்டிக்கான அணியில் யுவராஜ் சிங், உன்முகுத் சந்த், ராபின் உத்தப்பா, பாபா அபராஜித், கேதர் ஜாதவ், நமன் ஓஜா, யூசுப் பதான், இர்பான் பதான், பிரவீன் குமார், சுமித் நர்வால், ஷாபாஸ் நதீம், மந்தீப் சிங், ராகுல் சர்மா இடம் பெற்றுள்ளனர்.

4 நாள் போட்டிக்கான அணி

4 நாள் போட்டிக்கான அணியில், புஜாரா, ஜிவன்ஜித் சிங், கே.எல்.ராகுல், மன்பிரீத் ஜுனேஜா, ரஜத் பலிவால், ஹர்ஷத் கடிவாலே, பர்வேஸ் ரசூல், பார்கவ் பட், ஈஷ்வர் பாண்டே, ஷமி அமது, அசோக் திண்டா, ரோஹித் மோத்வானி, தவல் குல்கர்னி, பரஸ் டோக்ரா இடம் பெற்றுள்ளனர்.

2-3வது நான்கு நாள் போட்டிக்கான அணி

2வது மற்றும் 3வது நான்கு நாள் போட்டிகளுக்கான அணியில், புஜாரா, கம்பீர், ஷேவாக், ஷெல்டன் ஜாக்சன், அபிஷேக் நய்யார், பரஸ் டோக்ரா, உதய் கெளல், பர்வேஸ் ரசூல், பார்கவ் பட், தவல் குல்கர்னி, ஜாகிர் கான், ஈஷ்வர் சந்த் பாண்டே, முகம்மது சமி, முகம்மது கைப் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

English summary
Virender Sehwag, Gautam Gambhir, Yuvraj Singh and Zaheer Khan were handed lifelines to revive their international careers by the national selectors as they were on Tuesday picked in India A squads for series against West Indies A at home.
கருத்தை எழுதுங்கள்