Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

சாம்பியன்ஸ் லீக்: ஒட்டாகோ அணியின் நீல் புரூம் அபாரம்! 56 பந்துகளில் அதிவேக சதமடித்தார்!

Posted by:
Published: Thursday, September 26, 2013, 11:04 [IST]
 

ஜெய்ப்பூர்: சாம்பியன்ஸ் லீக் போட்டிகளில் ஒட்டாகோ அணி வீரர் நீல் புரூம் 56 பந்துகளில் அதிவேக சதமடித்தார். நேற்றைய போட்டியில் பெர்த் அணியை ஒட்டாகோ அணி வீழ்த்தியது.

ஜெய்ப்பூரில் நேற்று நடைபெற்ற ஏ பிரிவு லீக் ஆட்டத்தில் ஒட்டாகோ-பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணிகள் மோதின. ஒட்டாகோ கோ அணி, 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 242 ரன்கள் குவித்தது.

இதில் தொடக்க வீரர் நீல் புரூம் 56 பந்துகளில் 9 பவுண்டரி, 8 சிக்சர்களுடன் 117 ரன்கள் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமலேயே களத்தில் இருந்தார். இதுதான் சாம்பியன்ஸ் லீக் போட்டி 20 ஓவர் போட்டியில் அடிக்கப்பட்ட அதிவேக முதல் சதம் என்பது குறிப்பிடத்தக்கது.

சாம்பியன்ஸ் லீக்: ஒட்டாகோ அணியின் நீல் புரூம் அபாரம்! 56 பந்துகளில் அதிவேக சதமடித்தார்!

அந்த அணியின் பூர்டர் 45 ரன்களும், டென் டஸ்சாட் 66 ரன்களும் குவித்திருந்தனர்.

பின்னர் 243 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெர்த் அணி, முதல் பந்திலேயே முதல் விக்கெட்டை பறிகொடுத்தது. இந்த அதிர்ச்சியில் இருந்து அந்த அணி மீள்வதறகுள் 11 ரன்களைத் தொட்டபோது அடுத்தடுத்து அகர் மற்றும் காட்டிச் ஆகியோர் அவுட் ஆகினர்.

இருப்பினும் தொடர்ந்து வந்த வீரர்கள் நிதானமாக விளையாடி விக்கெட்டுகளை தக்க வைத்தனர். பெர்த் அணியின் வோக்ஸ் 36 ரன்களும், டர்னர் 23 ரன்களும் எடுத்தனர். கார்ட்ரைட் அரை சதம் கடந்தார். ஆனாலும் 20 ஓவர் முடிவில் அந்த அணி 5 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்களே எடுக்க முடிந்தது. பெர்த் அணியில் கார்ட்ரைட் 73 ரன்கள் குவித்து அவுட் ஆகாமல் இருந்தார்.

இதனால் 62 ரன்கள் வித்தியாசத்தில் ஒட்டாகோ அணி அபார வெற்றி பெற்றது. சதம் விளாசி அணியின் வெற்றிக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்த நீல் புரூம் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

English summary
Otago Volts opener Neil Broom scored the fastest century in Champions League history on Wednesday. He is the fifth batsman to register a ton in this Twenty20 tournament. Riding on his ton, Volts won by 62 runs.
கருத்தை எழுதுங்கள்