Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

சாம்பியன்ஸ் லீக்: லயன்ஸ் அணியை வீழ்த்தியது ராஜஸ்தான் அணி!

Posted by:
Published: Thursday, September 26, 2013, 11:05 [IST]
 

ஜெய்ப்பூர்: சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்காவின் லயன்ஸ் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்டில் நேற்றிரவு ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தென்ஆப்பிரிக்காவை சேர்ந்த லயன்ஸ் அணியை எதிர்கொண்டது. டாஸ் வென்ற லயன்ஸ் முதலில் பீல்டிங் செய்தது.

சாம்பியன்ஸ் லீக்: லயன்ஸ் அணியை வீழ்த்தியது ராஜஸ்தான் அணி!

இதனால் முதலில் பேட் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 183 ரன்களைக் குவித்தது. அந்த அணியின் பிராட் ஹாட்ஜ் அதிகபட்சமாக 46 ரன்களைக் குவித்தார்.

ஆனால் தொடர்ந்து விளையாடிய லயன்ஸ் அணியால் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 153 ரன்களே எடுக்க முடிந்தது. இதனால் 30 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் வெற்றி பெற்றது.

English summary
'Veteran's Day out' at Sawai Man Singh Stadium as 38-year-old Brad Hodge and 41-year-old Pravin Tambe engineered a comfortable 30-run victory for Rajasthan Royals against Highveld Lions of South Africa in a group league match of the CLT20.
கருத்தை எழுதுங்கள்