Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

கிரிக்கெட் வாரியத் தலைவராக சீனிவாசன் நாளை போட்டியின்றி மீண்டும் தேர்வு?

Posted by:
Published: Saturday, September 28, 2013, 16:48 [IST]
 

சென்னை: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக என்.சீனிவாசன் நாளை மீண்டும் எதிர்ப்பின்றி தேர்வு செய்யப்படக் கூடும் என்று தெரிகிறது.

கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக இருந்து வரும் என்.சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பன் ஐபிஎல் பெட்டிங் புகாரில் சிக்கி சிறைக்குப் போனார். இதனால் அவர் பதவியில் இருந்து ஒதுங்கி இருக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்.

கிரிக்கெட் வாரியத் தலைவராக சீனிவாசன் நாளை போட்டியின்றி மீண்டும் தேர்வு?

பின்னர் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அமைத்த விசாரணைக் குழு, குருநாத் மெய்யப்பன் மீதான புகாருக்கு ஆதாரம் இல்லை என்றது. ஆனால் மும்பை நீதிமன்றம் இந்த விசாரணைக் குழுவை நிராகரித்தது.

இந்நிலையில் நாளை நடைபெற உள்ள கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய பொதுக் குழுவுக்கு தடை கோரியும் சீனிவாசன் தேர்தலில் மீண்டும் போட்டியிடக் கூடாது என்றும் கோரி பீகார் கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் பொதுக் குழுவை கூட்ட அனுமதித்தது. சீனிவாசன் தேர்தலில் போட்டியிடவும் அனுமதித்தது. அதே நேரத்தில் தேர்தலில் வென்றாலும் மறு உத்தரவு வரும் வரை பதவி ஏற்கக் கூடாது என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து இன்று சீனிவாசன் வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். நாளை சென்னையில் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய பொதுக் குழுக் கூட்டம் கூடுகிறது. இந்தக் கூட்டத்தில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் சீனிவாசனுக்கு எந்த ஒரு எதிர்ப்பும் இருக்காது என்று கூறப்படுகிறது.

இதனால் சீனிவாசன் நாளை போட்டியின்றி 3வது முறையாக தலைவராக தேர்வு செய்யப்பட வாய்ப்பிருக்கிறது.

English summary
A defiant N Srinivasan is certain to be re-elected unopposed as the president of the Board of Control for Cricket in India (BCCI) during its Annual General Meeting (AGM) on Sunday after he filed his nomination on Saturday, although he won't be able to discharge his functions due to a Supreme Court order.
கருத்தை எழுதுங்கள்