Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

முதல் ஒரு நாள் போட்டி: 72 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!

Posted by:
Published: Monday, October 14, 2013, 10:22 [IST]
 

முதல் ஒரு நாள் போட்டி: 72 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!
 

புனே: முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவை 72 ரன்களில் ஆஸ்திரேலியா வீழ்த்தி முதலாவது வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

இந்தியா, ஆஸ்திரேலியா இடையேயான முதலாவது போட்டி புனேயில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்வு செய்தது.

ஆஸ்திரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஹூஜஸ், பிஞ்ச் களம் இறங்கினர். அந்த அணியின் பெய்லி 85 ரன்கள், பிஞ்ச் 72 ரன்கள், ஹூஜஸ் 47 ரன்கள், மாக்ஸ்வெல் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு ஆஸ்திரேலியா 304 ரன்கள் குவித்தது.

இதைத் தொடர்ந்து இந்திய அணி விளையாட தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான தவான் 7 ரன்களுக்கும் சர்மா 42 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.

கோஹ்லி அதிகபட்சமாக 61 ரன்கள், ரெய்னா 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். இந்திய அணி 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 232 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதனால் ஆஸ்திரேலிய அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

English summary
Australia's bid to become the world's top-ranked one-day nation has started with a 72-run upset win over India in the series-opening clash in Pune.
கருத்தை எழுதுங்கள்