Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

தொடங்கியது 4வது ஒரு நாள் போட்டி..இந்தியா பீல்டிங்.. இஷாந்த் இல்லைப்பா!

Posted by:
Published: Wednesday, October 23, 2013, 14:18 [IST]
 

ராஞ்சி: இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான நான்காவது ஒரு நாள் போட்டி ராஞ்சியில் தொடங்கியுள்ளது. இந்திய அணி டாஸ் வென்று முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்து களம் இறங்கியுள்ளது.

முதல் 3 போட்டிகளிலும் பெரிய அளவில் சொதப்பியெடுத்து விட்ட இஷாந்த் சர்மா கடைசி நேரத்தில் நீக்கப்பட்டுள்ளார். அதேபோல புவனேஸ்குமாரும் நீக்கப்பட்டுள்ளார். இவர்களுக்குப் பதில் ஜெயதேவ் உனக்தத், முகம்மது சமி ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தொடங்கியது 4வது ஒரு நாள் போட்டி..இந்தியா பீல்டிங்.. இஷாந்த் இல்லைப்பா!

இன்றைய போட்டி குறித்து பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. இதுவரை நடந்துள்ள 3 போட்டிகளில் ஆஸ்திரேலியா 2 போட்டிகளை வென்று விட்டது. இந்தியா 3வது போட்டியில் மிகவும் அதிர்ச்சிகரமான தோல்வியைத் தழுவியது. இந்தத் தோல்விக்கு முக்கியக் காரணமே, வேகப் பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மாதான்.

இன்றைய போட்டியில் இஷாந்த் சேர்க்கப்படவில்லை. அவருக்குப் பதில் புவனேஸ் குமார் சேர்க்கப்பட்டுள்ளார். இன்றைய போட்டியை ஆஸ்திரேலியா வென்று விட்டால் இந்தியாவுக்கு சிக்கலாகி விடும். மாறாக இந்தியா ஜெயித்தால், தொடரை வெல்லும் வாய்ப்பு தொடர்ந்து பிரகாசமாக இருக்கும் என்பதால் ரசிகர்கள் பேராவலுடன் காத்திருக்கின்றனர்.

English summary
Bogged down by the profligacy of their bowlers, especially Ishant Sharma, India would be under pressure to bounce back when they take on Australia in the fourth ODI on Wednesday, hoping to tide over their death bowling miseries.
கருத்தை எழுதுங்கள்