Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

மாஜி ஆஸி. கிரிக்கெட் கேப்டன் ரிச்சி பெனாட் கார் விபத்தில் படுகாயம்

Posted by:
Published: Thursday, October 24, 2013, 13:31 [IST]
 

மாஜி ஆஸி. கிரிக்கெட் கேப்டன் ரிச்சி பெனாட் கார் விபத்தில் படுகாயம்
 

சிட்னி: மாஜி ஆஸ்திரேலிய கிரிக்கெட் கேப்டன் ரிச்சி பெனாட் கார் விபத்தில் காயமடைந்துள்ளார்.

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் வியாழக்கிழமை இந்த சம்பவம் நடந்தது. ஆஸ்திரேலியா அணியின் கேப்டனாக இருந்தவர் பெனாட். பின்னர் கிரிக்கெட் வர்னணையாளராக மாறினார். கிரிக்கெட் வர்னணை உலகில் பிரபலமானவர்.

இவர் சிட்னியில் தனது காரை தானே தனியாக ஓட்டிச் சென்றபோது சாலையோரம் இருந்த சுவரில் மோதி விட்டார். இதில் அவர் படுகாயமடைந்தார். பெனாட்டுக்கு வயது 83 என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வயதிலும் கூட வர்னணையாளராக இருந்து வருகிறார் பெனாட். ஆஸ்திரேலியாவின் சேனல் 9 வர்ணையாளர் குழுவில் அவரும் ஒருவர் ஆவார்.

சிட்னியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பெனாட் அங்கு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு நெஞ்சு மற்றும் தோள்பட்டையில் அடிபட்டிருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

விபத்து குறித்து பெனாட் கூறுகையில், யாரும் காயமடையவில்லை. நான் மட்டுமே காயமடைந்துள்ளேன். எனக்கு என்ன கவலை என்றால் என்னை விட எனது காருக்கு ஏதாவது ஆகி விடக் கூடாதே என்பதுதான் என்றார்.

English summary
Former Australian captain Richie Benaud was injured in a car accident in Sydney on Thursday. Benaud, one of the best known voices in cricket commentary, was driving alone in his car and hit a small brick wall, according to a statement released by Channel Nine. The 83-year-old Benaud is part of Australia's Channel Nine commentary team.
கருத்தை எழுதுங்கள்