Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

நாக்பூர் ஒருநாள் போட்டியில் ஆஸி. கேப்டன் பெய்லி உலக சாதனை

Posted by:
Published: Thursday, October 31, 2013, 10:40 [IST]
 

நாக்பூர்: இந்தியாவுக்கு எதிரான 6-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய கேப்டன் ஜார்ஜ் பெய்லி 156 ரன்கள் குவித்து பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.

ஒரு நாள் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலிய வீரர் ஒருவரின் அதிகபட்ச ரன்கள் இதுவாகும் இதற்கு முன்பு இந்தியாவுக்கு எதிராக 2003-ம் ஆண்டு உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் ரிக்கிபாண்டிங் 140 ரன்கள் எடுத்ததே அதிகபட்ச ரன்களாக இருந்தது.

நாக்பூர் ஒருநாள் போட்டியில் ஆஸி. கேப்டன் பெய்லி உலக சாதனை

இத் தொடரில் பெய்லி இதுவரை 5 ஆட்டங்களில் களம் இறங்கி 474 ரன்கள் குவித்துள்ளார். இதன் மூலம் இரு நாடுகள் இடையிலான ஒரு நாள் தொடரில் அதிக ரன்கள் எடுத்தவர் என்ற புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

இதற்கு முன்பு ஜிம்பாப்வே வீரர் ஹாமில்டன் மசகட்சா 2009-ம் ஆண்டு கென்ய தொடரில் 467 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது. இரு நாடுகள் இடையிலான தொடரில் அதிக ரன்கள் குவித்த கேப்டனும் பெய்லி தான்.

முன்னதாக கடந்த மார்ச் மாதத்தில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் தென்னாப்பிரிக்காவின் டிவில்லியர்ஸ் மொத்தம் 367 ரன்கள் எடுத்திருந்தார்.

இந்த ஆண்டில் ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரர் என்ற பெருமையும் பெய்லிக்கு கிடைத்துள்ளது. அவர் 2013- ஆண்டில் 21 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 1094 ரன்கள் எடுத்துள்ளார்.

English summary
Bailey registered his second ODI century and on way to that score set records at the Vidarbha Cricket Association (VCA) Stadium. His ton took Australia to 350/6 in 50 overs. When Bailey had gone past the half century mark he broke South African skipper AB de Villiers record of most runs by a captain in a bilateral series.
கருத்தை எழுதுங்கள்