Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

இந்தியா- மே.இ. தீவுகள் இடையேயான ஒருநாள் தொடர்: கொச்சியில் நாளை முதல் போட்டி

Posted by:
Published: Wednesday, November 20, 2013, 13:48 [IST]
 

கொச்சி: இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு இடையேயான ஒருநாள் தொடரின் முதல் போட்டி நாளை கொச்சியில் நடைபெறுகிறது.

மேற்கிந்திய தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 2 டெஸ்ட் கொண்ட தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இரு அணிகள் இடையேயான 3 ஒருநாள் போட்டித் தொடரில் முதல் ஆட்டம் கேரள மாநிலம் கொச்சியில் நாளை நடைபெறுகிறது.

கொச்சியில் இரு அணி வீரர்கள்

இதற்காக இரண்டு அணி வீரர்களும் கொச்சி சென்றடைந்தனர். இரு அணியினரும் தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தியாவின் ஆதிக்கம் தொடருமா?

டெஸ்ட் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தியதை போலவே ஒருநாள் தொடரிலும் இந்தியாவின் ஆதிக்கம் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நம்பிக்கை நட்சத்திரங்கள் ரோஹித் சர்மா, கோஹ்லி

இந்திய அணியின் ரோஹித்சர்மா, விராத் கோஹ்லியின் ஆட்டம் மிகவும் சிறப்பாக இருந்தது. இருவருமே ஆஸ்திரேலியா தொடரில் இரண்டு சதம் அடித்தனர். ஷிகார் தவான், கேப்டன் டோணி, ரெய்னா, ஜடேஜா, யுவராஜ்சிங் போன்ற வீரர்களும் இந்தியாவுக்கு பலம்.

செம பந்து வீச்சாளர்கள்

பந்துவீச்சில் புவனேஸ்வர் குமார், அஸ்வின், முகமது சமி ஆகியோர் சிறப்பான நிலையில் இருப்பதால் இந்திய அணி தொடரை வெல்லும் வாய்ப்பு அதிகம்.

பதிலடி தருமா?

டெஸ்ட் தொடரை இழந்த மேற்கிந்திய தீவுகள் அணி ஒருநாள் தொடரில் பதிலடி கொடுக்குமா என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

பகல் இரவு ஆட்டம்

நாளைய போட்டி மழையால் பாதிக்கப்படவும் வாய்ப்பு இருக்கிறது. பகல்- இரவாக நடைபெறும் இந்த ஆட்டம் பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது.

English summary
After demolishing the West Indies in Sachin Tendulkar's emotionally draining farewell Test series, the Indian cricket team will look to extend its supremacy in the ODIs as well when the two sides face off in a three-match series starting tomorrow.
கருத்தை எழுதுங்கள்