Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

கர்நாடக கிரிக்கெட் சங்கத் தேர்தல்: பிரிஜேஸ் படேல்- உடையார் அணி அமோக வெற்றி

Posted by:
Updated: Monday, January 6, 2014, 17:22 [IST]
 

பெங்களூர்: கர்நாடக கிரிக்கெட் சங்க தேர்தலில் மைசூர் மகாஜாரா ஸ்ரீகண்டதத்த நரசிம்மராஜ உடையார் அணி தலைவர், செயலர் உட்பட அனைத்து பதவிகளையும் கைப்பற்றியுள்ளது.

கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத்துக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. 23 இடங்களுக்கு நடைபெற்ற தேர்தலில் அனைத்து இடங்களையும் மைசூர் அரச குடும்பத்தைச் சேர்ந்த ஸ்ரீகண்டதத்த நரசிம்மராஜ உடையார் அணி கைப்பற்றியது. .

கர்நாடக கிரிக்கெட் சங்கத் தேர்தல்: பிரிஜேஸ் படேல்- உடையார் அணி அமோக வெற்றி

உடையார் அணியின் பிரிஜேஸ் படேல். செயலராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஸ்ரீகண்டதத்த நரசிம்மராஜ உடையார் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சதானந்த மய்யா உள்ளிட்ட முன்னாள் நிர்வாகிகள் அனில் கும்ப்ளே, ஜவஹல் ஸ்ரீநாத் ஆதரவு வேட்பாளர்கள் தோல்வியை தழுவினர்.

நேற்றைய தேர்தலில் ராகுல் டிராவிட், பிரசன்னா, சந்திரசேகர், சையத் கிர்மானி, ஜிஆர் விஸ்வநாத் உள்ளிட்டோர் வாக்களித்தனர். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி உரிமையாளர் விஜய் மல்லையாவும் வாக்களித்தார். அவர் உடையார் அணியை ஆதரித்தார்.

கடந்த 2010ஆம் ஆண்டு தேர்தலில் ஸ்ரீகண்டதத்த நரசிம்மராஜ உடையாரை அனில் கும்ப்ளே தோற்கடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 1998ஆம் ஆண்டு முதல் 12 ஆண்டுகாலம் பிரஜேஸ் படேல் செயலராகப் பணியாற்றியிருந்தார்.

அனில் கும்ப்ளே மற்றும் ஸ்ரீநாத் ஆகியோர் நடப்பு தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என்று அறிவித்திருந்தாலும் சதானந்த மய்யாவையும் அவரது வேட்பாளர்களையும் ஆதரித்திருந்தனர்..

Story first published:  Monday, December 2, 2013, 10:46 [IST]
English summary
The Brijesh Patel-Srikantadatta Narasimharaja Wodeyar group made a clean sweep of Karnataka State Cricket Association (KSCA) elections here on Sunday at the M Chinnaswamy Stadium.
கருத்தை எழுதுங்கள்