Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

முதல் போட்டியில் இந்தியா தோல்வி - 24 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது நியூசி. - கோஹ்லி சதம் வீண்

Posted by:
Published: Sunday, January 19, 2014, 15:06 [IST]
 

நேப்பியர்: விராத் கோஹ்லி போட்ட அபாரமான சதம் வீணாகிப் போனது. நியூசிலாந்துடனான முதல் ஒரு நாள் போட்டியில் இந்தியா 24 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றுப் போனது.

இந்தியா, நியூசிலாந்து இடையிலான ஒரு நாள் தொடர் தொடங்கியுள்ளது. இன்று முதல் போட்டி நேப்பியரில் நடந்தது.

இந்திய அணியின் கேப்டன் டோணி டாஸ் வென்று முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தார். இந்திய அணி இன்று இஷாந்த் சர்மா, புவனேஸ்வர் குமார், முகம்மது ஷமி என்று மூன்று வேகப் பந்து வீச்சாளர்கள், ஆர்.அஸ்வின், ரவீந்திர ஜடேஜா ஆகிய இரு சுழற்பந்து வீச்சாளர்களுடன் களம் கண்டது.

முதல் போட்டியில் இந்தியா தோல்வி - 24 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது நியூசி. - கோஹ்லி சதம் வீண்

நியூசிலாந்தும் 3 வேகப் பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கியது. நாதன் மெக்கல்லம் மட்டும் சுழற்பந்து வீச்சாளராக இருந்தார்.

முதலில் பேட் செய்த நியூசிலாந்து சிறப்பாக ஆடி ரன்க குவித்தது. தொடக்க ஆட்டக்காரர்களான குப்தில் மற்றும் ரெய்டரை எளிதாக இந்தியா வீழ்த்தி விட்டாலும் பின்னால் வந்த வில்லியம்சன், டெய்லர் மற்றும் மெக்கல்லம் ஆகியோர் சிறப்பாக ஆடி அணியை நிமிர்த்தி விட்டனர்.

வில்லியம்சன் 71 ரன்களைக் குவித்தார். டெய்லர் 55 ரன்கள் எடுத்தார். மெக்கல்லம் 30 ரன்களைச் சேர்த்தார்.

அதேசமயம், ஆண்டர்சன்தான் நியூசிலாந்துக்கு கடைசி நேரத்தில் ரன் குவிய முக்கியக் காரணமாக அமைந்தார். அதிரடியாக ஆடிய அவர் 40 பந்துகளில் 68 ரன்களைக் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

முதல் போட்டியில் இந்தியா தோல்வி - 24 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது நியூசி. - கோஹ்லி சதம் வீண்

இறுதியில் 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்களை இழந்து 292 ரன்களைக் குவித்தது நியூசிலாந்து. இந்திய அணித் தரப்பில் முகம்மது ஷமி சிறப்பாக பந்து வீசி 4 விக்கெட்களைச் சாய்த்தார். மற்ற யாருமே சொல்லிக் கொள்ளும்படியாக பந்து வீசவில்லை. இதுதான் இந்திய அணியின் மிகப் பெரிய பலவீனம்.

குறிப்பாக இஷாந்த் சர்மாவின் பந்து வீச்சை நியூசிலாந்து நொறுக்கி விட்டது. 9 ஓவர் வீசி 72 ரன்களை வாரிக் கொடுத்த இஷாந்த் ஒரு விக்கெட் மட்டுமே வீழ்த்தினார்.

பின்னர் ஆட வந்த இந்தியாவுக்கு ரோஹித் சர்மா 3 ரன்களில் வீழ்ந்தது அடியாக விழுந்தது. இருப்பினும் ஷிகர் தவானும், விராத் கோஹ்லியும் நிலைத்து நின்று ஆட ஆரம்பித்தனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக தவான், 32 ரன்களில் வீழ்ந்தார்.

ஆனால் கோஹ்லி அட்டகாசமாக ஆட ஆரம்பித்தார். நியூசிலாந்து பந்து வீச்சை தைரியத்துடன் எதிர்கொண்ட ரன்களைக் குவிக்க ஆரம்பித்தார். இதனால் இந்திய ரசிகர்களுக்கு நம்பிக்கை கூடியது. தொடர்ந்து சிறப்பாக ஆடிய கோஹ்லி அபாரமான சதத்தையும் போட்டார்.

111 பந்துகளைச் சந்தித்து 11 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடந் 123 ரன்களைக் குவித்து கோஹ்லி ஆட்டமிழந்தார். அதன் பின்னர் இந்தியாவின் நம்பிக்கையும் மங்கிப் போனது. கடைசி நேரத்தில் அஸ்வின் மீது லேசான நம்பிக்கை பிறந்தது. ஆனால் அதுவும் சீக்கிரத்திலேயே முடிந்து போனது.

இறுதியில், 48.4 ஓவர்களிலேயே 268 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவின் கதை முடிவுக்கு வந்தது.

English summary
Virat Kohli's classy century went in vain as India were handed a 24-run defeat by New Zealand in the first One Day International here Sunday. In pursuit of 293, India's chase was well controlled by Kohli but his depature for 123 (111 balls, 11x4, 2x6) as the sixth wicket in the 45th over, put paid to winning chance. India were bowled out for 268 in 48.4 overs. Left-arm paceman Mitchell McClenaghan took 4/68 in 10 overs.
கருத்தை எழுதுங்கள்