Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

2வது ஒருநாள் போட்டி: நியூசிலாந்திடம் இந்தியா மீண்டும் தோல்வி!!

Posted by:
Updated: Wednesday, January 22, 2014, 15:50 [IST]
 

ஹாமில்டன் : 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலும் இந்தியாவை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து வென்றுள்ளது.

நியூசிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டி கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. நேப்பியரில் நடைபெற்ற முதலாவது ஒரு நாள் போட்டியில் 24 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி அடைந்தது.

இந்த நிலையில் 2வது ஒரு நாள் போட்டி இன்று ஹாமில்டன் செட்டன் பார்க் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் டோணி முதலில் பந்து வீச முடிவு செய்தார்.

குறுக்கிட்ட மழை

இதைத் தொடர்ந்து முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 33.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் எடுத்து இருந்த நிலையில்,ஆட்டம் மழையால் தடைபட்டது.

42 ஓவராக குறைப்பு

இதனால் 42 ஓவர்களாக போட்டி குறைக்கப்பட்டது. பின்னர் தொடர்ந்து விளையாடிய நியூசிலாந்து அணி 42 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 271 ரன்கள் குவித்தது.

297 ரன்கள் பெற இந்தியாவுக்கு இலக்கு

இதையடுத்து டக்வெர்த் லீவிஸ் முறைப்படி இந்திய அணிக்கு வெற்றி இலக்காக 42 ஓவர்களில் 297 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது.

 

 

சுமார் ஆட்டம்

இந்திய அணியில் தொடக்க வீரர்கள் தவான் 12 ரன்களிலும் ரோகித் சர்மா 20 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர்.

 

 

கோஹ்லி 78 ரன்கள்

கோஹ்லி 78, ரகானே 36, டோணி 56 ரன்கள் குவித்தனர். ஆனால் பின்வரிசை வீரர்கள் சொதப்பிவிட்டனர்.

15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி

ஜடேஜா, அஸ்வின், புவனேஸ்வர் குமார் ஆகிய பின்வரிசை வீரர்கள் சரியாக விளையாடததால் 41.3 ஓவர் முடிவில் இந்திய அணியால் 277 ரன்களையே எடுக்க முடிந்தது. இதனால் நியூசிலாந்து அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் மீண்டும் வென்றது.

Story first published:  Wednesday, January 22, 2014, 15:35 [IST]
English summary
Team India managed to score 277 runs at the loss of nine wickets while chasing the revised target of 293 runs against New Zealand.
கருத்தை எழுதுங்கள்