Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

ஆஸ்திரேலியாவுடன் மோதப் போகும் தென் ஆப்பிரிக்க டெஸ்ட் அணியில் தாஹிர் இல்லை

Posted by:
Published: Wednesday, January 29, 2014, 14:58 [IST]
 

ஆஸ்திரேலியாவுடன் மோதப் போகும் தென் ஆப்பிரிக்க டெஸ்ட் அணியில் தாஹிர் இல்லை
 

ஜோஹன்னஸ்பர்க்: ஆஸ்திரேயாவுடனான டெஸ்ட் தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், ஆல் ரவுண்டர் ரியான் மெக்லாரன், வேயன் பர்னல் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆனால் லெக் ஸ்பின்னர் இம்ரான் தாஹிர் சேர்க்கப்படவில்லை.

இரு அணிகளும் அடுத்த மாதம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதவுள்ளன. இதற்கான 15 பேர் கொண்ட தென் ஆப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல் டெஸ்ட் போட்டி செஞ்சுரியனில் பிப்ரவரி 12ம் தேதி தொடங்குகிறது. தென் ஆப்பிரிக்க அணியில் கிட்டத்தட்ட அனைத்துத் துறைகளையும் சேர்ந்த சிறந்த வீரர்களைச் சேர்த்துள்ளனர். அனைத்தும் கலந்த சரிவிகித சமானத்தில் அணி உள்ளது.

அணி விவரம்

கேப்டன் கிரீம் ஸ்மித், ஹஷிம் அம்லா, அப் டி வில்லியர்ஸ், ஜேபி டுமினி, பாப் டு பிளஸ்ஸிஸ், டீன் எல்கர், ரோரி க்ளீன்வெல்ட், ரியான் மெக்லாரன், மார்னி மார்க்கல், வேயன் பர்னல், அல்விரோ பீட்டர்சன், ராபி பீட்டர்சன், வெர்னான் பிளான்டர், டேல் ஸ்டெயின், தாமி சோலகி.

English summary
South Africa have dropped legspinner Imran Tahir for the three-match Test series against Australia starting next month. The 15-man squad announced Wednesday, sees the return of all-rounders Ryan McLarenand Wayne Parnell in place of Tahir and the retired Jacques Kallis. The first Test is in Centurion from February 12.
கருத்தை எழுதுங்கள்