Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

உலகக் கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி - இந்திய அணி வங்கதேசம் பயணம்

Posted by:
Updated: Friday, March 14, 2014, 17:24 [IST]
 

டாக்கா: இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்காக வங்கதேசம் சென்றடைந்தது.

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் பங்கேற்பதற்காக இந்திய அணி இன்று வங்காளதேசத்திற்கு புறப்படுகிறது.

21ஆம் தேதி மிர்பூரில் நடக்கும் போட்டியில் இந்தியா, பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. பயிற்சி ஆட்டத்தில் 17 இல் இலங்கையுடனும், 19 இல் இங்கிலாந்துடனும் இந்தியா மோதுகிறது

கிரிக்கெட் திருவிழா:

16 அணிகள் இடையிலான 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா வங்காளதேசத்தில் நாளை மறுதினம் முதல் ஏப்ரல் 6 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

பாகிஸ்தானுடன் மோதல்:

இதில் நேரடியாக சூப்பர் - 10 சுற்றில் விளையாட உள்ள இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் பரம எதிரியான பாகிஸ்தானை வருகிற 21 ஆம் தேதி மிர்புரில் சந்திக்கிறது. முன்னதாக இரண்டு பயிற்சி ஆட்டங்களில் முறையே இலங்கை மற்றும் இங்கிலாந்துடன் மோதுகிறது.

இந்திய அணி வங்க தேசம் பயணம்:

இந்த போட்டியில் பங்கேற்பதற்காக டோனி தலைமையிலான இந்திய அணி வங்காளதேசத்திற்கு இன்று புறப்பட்டு செல்கிறது.

தொடர் தோல்வியில் இந்தியா:

தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து தொடர், ஆசிய கோப்பை கிரிக்கெட் என்று தொடர்ச்சியான தோல்விகளால் இந்திய அணி மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. காயத்தால் ஆசிய கோப்பையில் ஆடாத கேப்டன் டோனி, அணியை மறுபடியும் வெற்றிப்பாதைக்கு கொண்டு செல்ல வேண்டிய நெருக்கடியில் தவிக்கிறார்.

தொடருக்கு முன் பேட்டி:

வழக்கமாக ஒரு தொடரில் விளையாடுவதற்காக வெளிநாட்டுக்கு கிளம்புவதற்கு முன்பாக, இந்திய அணியின் கேப்டன் மற்றும் பயிற்சியாளர் நிருபர்களை சந்தித்து அது தொடர்பாக பேட்டி அளிப்பது வழக்கம்.

பயத்தால் பேட்டிக்கு ஏற்பாடு இல்லை:

ஆனால் இந்த முறை கேப்டன் டோனியும், பயிற்சியாளர் டன்கன் பிளட்சரும் சரமாரியான கேள்விகளை எதிர்கொள்ள நேரிடும், ஐ.பி.எல். சூதாட்ட வழக்கு தொடர்பான கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டி வரும் என்பதை கருத்தில் கொண்டு பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்படவில்லை. டாக்கா சென்றடைந்த பிறகே கேப்டன் டோனி பேட்டி கொடுப்பார் என்று இந்திய கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்திய வீரர்கள் பட்டியல்:

20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணி வீரர்கள் , டோனி (கேப்டன்), ஷிகர் தவான், ரோகித் ஷர்மா, விராட் கோலி, சுரேஷ் ரெய்னா, யுவராஜ்சிங், ரஹானே, ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், புவனேஷ்வர்குமார், முகமது ஷமி, ஸ்டூவர்ட் பின்னி, அமித் மிஸ்ரா, மொகித் ஷர்மா, வருண் ஆரோன்.

விராட்டின் டுவிட்டர் கருத்து:

இதற்கிடையே துணை கேப்டன் விராட் கோலி தனது டுவிட்டர் பக்கத்தில், "ஓய்வு நல்ல முறையில் முடிந்தது. இது, மீண்டும் கடினமான சவாலுக்கு தயாராக வேண்டிய நேரம் " என்று குறிப்பிட்டுள்ளார்.

Story first published:  Friday, March 14, 2014, 15:27 [IST]
English summary
The Mahendra Singh Dhoni led Indian team left here on Friday for Bangladesh to compete in the ICC World T20 2014 scheduled from March 16 to April 6. The former champions would open their campaign against arch-rivals Pakistan on March 21 at Mirpur in a Super-10 game and then take on the West Indies on March 23 at the same venue.
கருத்தை எழுதுங்கள்