Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

7வது ஐபிஎல் அட்டவணை வெளியீடு- ஏப். 16-ல் கொல்கத்தா- மும்பை அணிகள் அபுதாபியில் மோதல்!!

Posted by:
Updated: Tuesday, July 14, 2015, 15:32 [IST]
 

மும்பை: 7வது ஐபிஎல் போட்டிகளுக்கான முதல் கட்ட அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அபுதாபியில் ஏப்ரல் 16-ந் தேதி நடைபெறும் முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன.

7வது ஐபிஎல் போட்டிகள் அடுத்த மாதம் தொடங்குகிறது. இந்தியாவில் லோக்சபா தேர்தல் நடைபெறுவதால் ஐபிஎல் போட்டிகளுக்கு போதுமான பாதுகாப்புகளை வழங்க முடியாது என்று மத்திய அரசு தெரிவித்துவிட்டது. இதைத் தொடர்ந்து வெளிநாடுகளில் ஐபிஎல் போட்டிகளை நடத்த முடிவு செய்யப்பட்டது.

IPL 7 First Phase (UAE) Schedule

இந்நிலையில் ஏப்ரல் 16 முதல் 30-ந் தேதி வரை 20 போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டிகள் இந்திய நேரப்படி மாலை 4 மணி (உள்ளூர் நேரம் 2.30மணி) மற்றும் இரவு 8 மணிக்கு (உள்ளூர் நேரம் 6.30மணி) நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

போட்டிகள் விவரம்:

ஏப்ரல் 16: கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- மும்பை இந்தியன்ஸ் (அபுதாபி) இரவு 8 மணி

ஏப்ரல் 17: டெல்லி டேர்டெவில்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ( ஷார்ஜா) இரவு மணி

ஏப்ரல் 18: சென்னை சூப்பர் கிங்ஸ்- கிங்ஸ் லெவன் பஞ்சாப் (அபுதாபி) மாலை 4 மணி

ஏப்ரல் 18: சன் ரைசர்ஸ் ஹைதராபாத் - ராஜஸ்தான் ராயல்ஸ் (அபுதாபி) இரவு 8 மணி

ஏப்ரல் 19: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - மும்பை இந்தியன்ஸ் அணி (துபாய்) மாலை 4 மணி

ஏப்ரல் 19: கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- டெல்லி டேர்டெவில்ஸ் (துபாய்) மாலை 8 மணி

ஏப்ரல் 20:ராஜஸ்தான் ராயல்ஸ்- கிங்ஸ்லெவன் பஞ்சாப் (ஷார்ஜா) இரவு 8 மணி

ஏப்ரல் 21: சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி டேர்டெவில்ஸ் (அபுதாபி) இரவு 8 மணி

ஏப்ரல் 22: கிங்ஸ் லெவன் பஞ்சா- சன் ரைசர்ஸ் ஹைதராபாத் (ஷார்ஜா) இரவு 8 மணி

ஏப்ரல் 23: ராஜஸ்தான் ராயல்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் (துபை) இரவு 8 மணி

ஏப்ரல் 24: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (ஷார்ஜா) இரவு 8 மணி

ஏப்ரல் 25: சன் ரைசர்ஸ் ஹைதராபாத்- டெல்லி டேர்டெவில்ஸ் (துபாய்) மாலை 4 மணி

ஏப்ரல் 25: சென்னை சூப்பர் கிங்ஸ்- மும்பை இந்தியன்ஸ் (துபாய்) இரவு 8 மணி

ஏப்ரல் 26: ராஜஸ்தான் ராயல்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (அபுதாபி) மாலை 4 மணி

ஏப்ரல் 26: கிங்ஸ் லெவன் பஞ்சாப்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (அபுதாபி) இரவு 8 மணி

ஏப்ரல் 27: டெல்லி டேர்டெவில்ஸ்- மும்பை இந்தியன்ஸ் (ஷார்ஜா) மாலை 4 மணி

ஏப்ரல் 27: சன் ரைசர்ஸ் ஹைதராபாத்- சென்னை சூப்பர் கிங்ஸ் (ஷார்ஜா) இரவு 8 மணி

ஏப்ரல் 28: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்- கிங்ஸ்லெவன் பஞ்சாப் (துபாய்) இரவு 8 மணி

ஏப்ரல் 29: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் (அபுதாபி) இரவு 8 மணி

ஏப்ரல் 30- மும்பை இந்தியன்ஸ் -சன் ரைசர்ஸ் ஹைதராபாத் (துபாய்) இரவு 8 மணி

Story first published:  Wednesday, March 19, 2014, 17:21 [IST]
English summary
The Indian Premier League's (IPL) Governing Council (GC) today announced the schedule for the first leg of matches of IPL 7. United Arab Emirates (UAE) will host 20 matches from April 16 to 30. The opening game is between reigning champions Mumbai Indians and Kolkata Knight Riders in Abu Dhabi.
கருத்தை எழுதுங்கள்