Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

கவாஸ்கரின் தாய் மாமா மாதவ் மந்த்ரி மரணம்.. வயது 92

Posted by:
Updated: Wednesday, May 28, 2014, 12:21 [IST]
 

கவாஸ்கரின் தாய் மாமா மாதவ் மந்த்ரி மரணம்.. வயது 92
 

மும்பை: இந்தியாவின் பழம்பெரும் டெஸ்ட் கிரிக்கெட் வீரரும், சுனில் கவாஸ்கரின் தாய் மாமாவுமான மாதவ் மந்த்ரி உடல் நலக்குறைவால் இன்று மரணமடைந்தார். அவருக்கு வயது 92.

குறைந்த ஆட்டங்களிலேயே விளையாடியிருந்தாலும் சிறந்த விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் மந்த்ரி. சமீபகாலமாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த மந்த்ரி, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், சிகிச்சைப் பலனளிக்காமல் மருத்துவமனையிலேயே இன்று அவரது உயிர் பிரிந்தது. மந்த்ரி திருமணமே செய்து கொள்ளவில்லை.

மந்த்ரியின் மறைவுச் செய்தியை கேட்ட முன்னாள் இந்திய கேப்டன் அஜித் வடேகர் தனது இரங்கல் செய்தியில், ‘நான் கல்லூரியில் படிக்கும் போது என்னை கிரிக்கெட் விளையாட சொல்லி ஊக்கப்படுத்தியவர் மந்த்ரி. அவர் ரொம்ப ஸ்டிரிக்டானவர். அப்போது அவரது அணியில் ரஞ்சிக் டிராபி வீரர்களும் இருந்தனர். நட்பு ரீதியில் சிலமுறை அவர்களுடன் நானும் விளையாடி இருக்கிறேன். நான் கிரிக்கெட்டுக்கு வர காரணமே மந்த்ரிதான்' எனத் தெரிவித்துள்ளார்.

அதேபோல், மும்பை கிரிக்கெட் சங்கத்தின் தலைவரும், தேசியவாத காங்கிரஸ் தலைவருமான சரத்பவார் தனது இரங்கல் செய்தியில், ‘மாதவ் மாந்த்ரி மும்பை மற்றும் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மறக்க முடியாத ஒருவர். கிரிக்கெட் விளையாட்டு அவரை வேறு எதனோடும் ஒப்பிட முடியாத அளவில் நேசிக்கிறது' எனக் குறிப்பிட்டுள்ளார்.

Story first published:  Friday, May 23, 2014, 15:28 [IST]
English summary
India's oldest Test cricketer Madhav Mantri, maternal uncle of the legendary Sunil Gavaskar, died here early this morning in a local hospital due to old age complications, sources close to him said.
கருத்தை எழுதுங்கள்